ஆங்கிலத்தில் மனநிலையை (Mood) விவரிக்கும் முறைகள்!


வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளைக் கடந்துவரும் உங்கள் மனநிலை ஒருபோதும் ஒரே விதமாக இருப்பதில்லை. உங்களது மனநிலை மாத்திரமல்ல எந்தவொரு மனிதனதும் மனநிலை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.

"இன்னைக்கு என்னோட மூட் (mood) சரியில்ல" என்று யாராவது ஒருவர் சொல்வதை நீங்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள் அல்லது நீங்களே உங்கள் வாழ்க்கையில் பல தடவைகள் கூறியிருப்பீர்கள். Mood சரியில்லை என்று சொல்லிவிட்டு அதை சரி செய்ய நீங்களே ஒரு வழியையும் கண்டுபிடிப்பீர்கள்.

நீங்கள் சந்தோசமாக இருக்கும் போது யாராவது உங்களிடம் "இன்னைக்கு நல்ல மூட்ல (mood) இருக்கீங்க போல" என்றும் கேட்டிருப்பார்கள்.

மனநிலைக்கும் உங்கள் முகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உங்கள் மனநிலை எதுவாயினும் அது உங்கள் முகத்தில் இலகுவாக வெளிப்பட்டு விடும். அதனால் தானோ என்னவோ அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

இங்கே இந்தப் பதிவில் Mood எனப்படும் மனநிலையை விவரிக்க உதவும் சில ஆங்கில சொற்றொடர்களைப் பற்றிப் பார்ப்போம்.

1. Broad smile on the face

இந்த சொற்றொடர் ஒருவரின் முகத்தில் புன்னகையுடன் கூடிய மகிழ்ச்சி இருப்பதை வெளிப்படுத்துவை பற்றிக் கதைக்க உதவும் ஒரு சொற்றொடராகும்.

You seem to have a broad smile on your face. 
என்ன உங்கள் முகத்தில் ஒரு பரந்த புன்னகை இருப்பது தெரிகிறது.

2. Beaming from ear to ear.

இந்த சொற்றொடர் ஒருவரின் முகத்தில் உள்ள அளவு கடந்த மகிழ்ச்சியை விவரிக்கப் பயன்படுகிறது.

'அவளது முகத்தில் அளவு கடந்த மகிழ்ச்சி உள்ளது' என்பதை She is beaming from ear to ear என்று கூறலாம்.

இங்கே Beaming என்பது வெளிச்சத்தையும், ear to ear என்பது உங்கள் வாய் உங்கள் காதுகளை தொடும் அளவுக்கு உங்கள் முகத்தில் புன்னகை இருப்பதையும் குறிக்கிறது.

3. Having a log face

இந்த சொற்றொடர் ஒருவரின் முகத்தில் உள்ள கவலையை விவரிக்கப் பயன்படுகிறது. இங்கே long face என்பது நீளமான முகம் என்பதில்லை. பொதுவாக நீங்கள் கவலையடையும் போது உங்கள் முகம் சற்று வித்தியாசமாக தோற்றமளிக்கும், இதையே இங்கே long face எனக் குறிப்பிடுகின்றனர்.

ஆகவே 'ஏன் நீங்கள் கவலையாக இருக்கிறீர்கள்?' என்பதை Why are you having a long face? என்று கேட்க முடியும்.

4. Wearing a frown

Frowning என்பது கோபத்தில் கண் புருவங்கள் சுருங்குவதைக் குறிக்கும். ஆகவே இங்கே wearing a frown என்பது முகத்தில் கோபம் இருப்பதை குறிக்கும்.

'ஏன் அவன் கோபமாக இருக்கிறன்?' என்பதை Why is he wearing a frown? என்று கேட்க முடியும்.

5. Dirty look

இங்கே dirty look என்பது அழுக்கான பார்வை என்று பொருள்படுவதில்லை. மாறாக இந்த சொற்றொடர் ஒருவரின் முகத்தில் உள்ள கடுமையான கோபத்தை விவரிக்க பயன்படுகிறது. 

6. Raising eyebrows

இந்த சொற்றொடர் முகத்தில் ஆச்சரியத்தை விவரிக்கப் பயப்படுகிறது. உண்மையில் raising eyebrows என்பது கண் புருவங்களை உயர்த்துதல் என்று பொருள்படும். ஒருவர் எப்போது கண் புருவங்களை உயர்த்துவார்? ஆச்சரியத்தில் தான். ஆகவே இந்த சொற்றொடர் எதிர்பாரதமல் நடக்கும் ஒரு ஆச்சரியமான விடயத்தின் போது உங்கள் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை விவரிக்கப் பயன்படுகிறது.
Previous Post Next Post