அப்படிப்பட்ட யாராவது ஒருவர் அவர்கள் செய்த தவறை உணர்ந்து உங்களிடம் Sorry (மன்னித்துக்கொள்ளுங்கள்) என்று கூறும் போது உங்கள் மனதில் பதிலாக எதைக் கூற நினைப்பீர்கள்? கண்டிப்பாக It's Okay (பரவாயில்லை) என்று தான் பதிலளிப்பீர்கள். ஆனால் உண்மையில் It's Okay எனும் சொற்றொடரால் மட்டும் நீங்கள் உங்கள் மனதில் எழுந்த உணர்வுகளை எல்லாம் வெளிப்படுத்திவிட முடிகிறதா? உண்மையில் இல்லை என்று தான் கூற வேண்டும்.
ஒருவர் உங்களிடம் Sorry கேட்கும் போது அவர் ஏதோ ஒரு தவறை செய்த உணர்வில் அல்லது ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்துகொண்டே உங்களிடம் Sorry என்று கூறுவார்கள். அவ்வாறு Sorry என்று கூறும் ஒருவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் எந்நேரமும் It's Okay என்று பதிலளிப்பது உண்மையில் போதுமானதாக இருக்காது. ஆகவே தான் ஒருவர் Sorry கேட்கும் போது It's Okay எனும் சொற்றொடருக்குப் பதிலாக இன்னும் சற்று ஆழமான அர்த்தம் வரும் வகையில் நீங்கள் உங்கள் பதிலை வழங்க வேண்டும்.
இன்று இங்கே அவ்வாறான புதிய 05 சொற்றொடர்களைப் பற்றிப் பார்ப்போம்.
01. No harm done - எந்தத் தீங்கும் செய்யவில்லை
No harm done எனும் இந்த சொற்றொடரினால் நீங்கள் கூறுவது என்னவென்றால் நீங்கள் செய்த விடயம் அல்லது உங்கள் தவறு என்னை பெரிதாக ஒன்றும் பாதிக்கவில்லை, ஆகவே அதற்குப் பரவாயில்லை, விட்டுவிடுங்கள்.
02. Forget about it - அதை மறந்துவிடுங்கள்.
ஒருவர் செய்த தவறை நினைத்து அவர் உண்மையில் உங்களிடம் மனம் வருந்தி Sorry கேட்பார். அப்போது அவரை ஆறுதல்படுத்த நீங்கள் இந்த Forget about it (அதை மறந்துவிடுங்கள்) எனும் சொற்றொடரை பயன்படுத்தலாம். ஒருவர் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் உங்களுக்கு செய்த ஒரு தவறை நினைத்து Sorry கேட்கும் போதும் அவருக்கு ஆறுதல் கூற நீங்கள் இந்த சொற்றொடரை உபயோகிக்கலாம்.
03. I quite understand - எனக்குப் புரிகிறது / என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்த சொற்றடரால் வெளிப்படும் அர்த்தமானது 'எல்லோராலும் இவ்வாறான தவறுகள் ஏற்படுகின்றன, நான் அதைப் புரிந்துகொண்டேன், நீங்கள் இதை பிழையான நோக்கத்தில் செய்திருக்கமாடீர்கள்' என்பது தான். உங்கள் நெருங்கிய உறவுகள் தவறுசெய்துவிட்டு உங்களிடம் Sorry கேட்கும் போது நீங்கள் இந்த சொற்றொடரை பயன்படுத்த முடியும்.
04. No need - தேவையில்லை / அவசியமில்லை.
ஒருவர் Sorry கூறும் போது அவர் தவறு ஏதும் செய்யவில்லை, அவர் Sorry கூற வேண்டிய அவசியமில்லை என்று கூறுவதற்கு இந்த சொற்றொடரை பயன்படுத்த முடியும்.
No need to say sorry (Sorry சொல்லத் தேவையில்லை).
04. Apology accepted - மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒருவர் உண்மையில் தவறு செய்துவிட்டு உங்களிடம் மன்னிப்பு கேட்கும் போது நீங்கள் அவருக்கு மிகவும் ஆறுதலான முறையில் மன்னிப்பு வழங்க இந்த சொற்றொடரை உபயோகிக்க முடியும்.
05. Everyone makes mistakes - எல்லோரும் தவறு செய்கிறார்கள்.
இங்கேயும் ஒருவர் தவறு செய்துவிட்டும், அதை உணர்ந்து உங்களிடம் மன்னிப்புக்கோரும் போது அவருக்கு ஆறுதலாக மன்னிப்பு வழங்க இந்த சொற்றொடரை நீங்கள் உபயோகிக்கலாம்.