ஆங்கிலத்தில் அழகிய 06 சொற்கள் | Beautiful Words in English


உங்கள் வாழ்நாளில் அண்ணளவாக நீங்கள் எத்தணை சொற்கள் கதைத்திருப்பீர்கள்? உங்களால் கணிப்பிட முடியுமா? ஒருவர் அண்ணளவாக ஒருநாளைக்கு 2000 முதல் 3000 சொற்கள் வரை கதைப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

இங்கே ஆங்கிலத்தில் கதைக்கும் போது பயன்படுத்தக் கூடிய சில அழகிய சொற்கள் பற்றி பார்ப்போம். நீங்கள் ஆங்கிலத்தில் கதைக்கும் போது இவற்றைப் பயன்படுத்தினால் உங்கள் உரையாடல் மேலும் மெருகூட்டப்படும்.

01. Enchanting

Enchanting என்பது கவர்ச்சியை அல்லது மனதை கவரும் ஒரு விடயத்தை விவரிக்க உதவும் சொல்லாகும்.

This is an enchanting place.
இது ஒரு மனதை கவரும் இடம்.

02. Inestimable

Inestimable என்பது ஒரு விடயத்தின் சிறப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில் இருக்கும் போது, அதைப் பற்றிக் குறிப்பிட உதவும் சொல்லாகும்.

Your support is inestimable.
உங்கள் ஆதரவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 

03. Savvy

Savvy எனும் சொல் ஒருவருக்கு ஒரு விடயத்தில் உள்ள நடைமுறை அறிவை அல்லது தேர்ச்சியை விவரிக்கப் பயன்படுகிறது.

He is tech-savvy.
அவன் தொழிநுட்பத்தில் நல்ல தேர்ச்சியுடையவன்.

04. Evocative

Evocative என்பது கடந்தகாலத்தில் நிகந்த ஒரு இனிமையான நிகழ்வை நினைவுபடுத்துவத்தை விவரிக்க உதவும் சொல்லாகும்.

This story is evocative.
இந்தக் கதை கடந்தகால நினைவுகளை மீட்டிப்பார்க்கிறது.

05. Veracity

Veracity என்பது ஒருவரின் நேர்மையையும் உண்மைத் தன்மையையும் விவரிக்கப் பயன்படும் சொல்லாகும்.

Do you question my veracity?
நீங்கள் எனது நேர்மையை கேள்விக்குள்ளாக்குகிறீர்களா?

06. Jubilant

Jubilant என்பது ஒரு வெற்றியின் போது அல்லது ஒரு சாதனையின் போது ஏற்படும் அளவுகடந்த மகிழ்ச்சியை விவரிக்க பயன்படும் ஒரு சொல்லாகும்.

She is jubilant about her achievement.
அவளது சாதனை பற்றி அவள் அளவுகடந்த மகிழ்ச்சியில் உள்ளாள்.
Previous Post Next Post