ஆங்கிலத்தில் கற்றலுடன் தொடர்புடை 05 சுவாரஸ்யமான சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் | Expressions Used For Schooling & Studying


இங்கே ஆங்கிலத்தில் நீங்கள் அறிந்திராத கற்றலுடன் தொடர்புடைய சில சொற்கள் பற்றிப் பார்ப்போம். இந்த சொற்களில் சில நேரடி தமிழ் மொழிபெயர்ப்பின் அர்த்தம் தருவதில்லை, அவற்றால் கூறும் விடயம் நேரடித் தமிழ் மொழிபெயர்ப்பில் இருந்து சற்று வித்தியாசப்படலாம்.

உண்மையில் இங்கே தரப்படும் சொற்கள் உங்களுக்குப் புதியவையாக இருந்தாலும், இவை மிகவும் சுவாரஸ்யமானவையாகவும், ஒரு விடயத்தை தெளிவாகக் கூறுவதற்கு மிகவும் பயனுள்ளவையாகவும் இருக்கும்.

01. Ace a test

Ace a test என்பது ஒரு பரீட்சையை சிறந்த முறையில் எழுதுவதை விவரிக்கப் பயன்படுகிறது.  

I aced my English test.
நான் எனது ஆங்கிலப் பரீட்சையை நன்றாக செய்து முடித்தேன்.

02. Cram

Cram என்பது குறுகிய காலத்தினுள் ஒரு விடயத்தை படித்து முடிப்பதை அல்லது மனப்பாடம் செய்வதை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக நீங்கள் ஒரு பரீட்சைக்கு போதுமான அளவு தயாராகவில்லை என்றால், பரீட்சைக்கு முன்னைய நாள் இரவு முழுவதும் கண்விழித்துப் படிப்பீர்கள், அனைத்தையும் மனப்பாடம் செய்ய முயற்சிப்பீர்கள். இவ்வாறு செய்வதை cramming என்று கூறுவார்கள்.

உங்கள் பரீட்சைக்கு முன்னைய நாள் யாராவது உங்களை எங்காவது வெளியில் செல்ல அழைத்தால், அந்த அழைப்பை மறுக்க, உங்களால் பின்வருமாறு பதிலளிக்க முடியும்.

Sorry, I can't come today. I have to cram for my exam tonight.
மன்னித்துக்கொள்ளுங்கள், என்னால் இன்று வர முடியாது. இன்றிரவு நான் எனது பரீட்சைக்குத் தயாராக வேண்டியுள்ளது.

03. Cut class

இங்கே cut class என்பது ஒரு வகுப்பிற்கு செல்லாமல் இருப்பதை குறிக்கிறது.

I am going to cut today's class.
நான் இன்றைய வகுப்புக்கு போகப்போவதில்லை.

04. Drop a class

மேலே உள்ள cut class என்பது ஒரு வகுப்பிற்கு செல்லாமல் இருப்பது மட்டுமே. ஆனால் இங்கே உள்ள drop a class என்பது ஒரு வகுப்பிற்கு நீண்ட நாட்களுக்கு செல்லாமல் இருப்பதைக் குறிக்கிறது. நீங்கள் ஒரு வகுப்பு தேவையில்லை என்று கருதும் போது நீங்கள் அந்த வகுப்பிற்கு செல்ல மாட்டீர்கள்.

I am going to drop the history class.
நான் வரலாறு வகுப்பிற்கு போகப்போவதில்லை.

05. Hit the books

இங்கே hit the books என்பது புத்தகங்களுக்கு அடிப்பது என்று பொருள்படாது. இங்கே hit the books என்பது புத்தகத்தை திறந்து படிக்க ஆரம்பிப்பதை குறிக்கிறது.

Tomorrow is my science exam, so I should hit the books now.
நாளை எனது விஞ்ஞானப் பரீட்சை, ஆகவே நான் இப்போது படிக்க ஆரம்பிக்க வேண்டும்.
Previous Post Next Post