அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய பொதுவான ஆங்கில சொற்றொடர்கள் | Everyday Life Phrases (Part 01)


ஆங்கிலம் பேசுவதற்கு சிலவேளைகளில் கடினமாகவும் பயமாகவும் இருக்கலாம்.  ஆங்கிலத்தை தாய்மொழியாக பேசுபவர்களுக்குக் கூட இந்தப் பிரச்சினை இருக்கும்.

இருப்பினும் ஆங்கிலத்தை பொறுத்தவரையில் அன்றாட வாழ்க்கையில் உங்களால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பல சொற்றொடர்கள் உள்ளன. நீங்கள் இந்த சொற்றொடர்களைக் கற்றுக் கொண்டு அவற்றைப் பயிற்சி செய்தால், நண்பர்கள், உறவினர்கள் அல்லது யாருடன் வேண்டுமென்றாலும் ஆங்கிலத்தில் பேசுவது மிகவும் இலகுவாகிவிடும்.

இங்கே அவ்வாறு அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய பொதுவான சில ஆங்கில சொற்றொடர்ககள் பற்றி பார்க்கலாம். இங்கே இவற்றுக்குத் தரப்பட்டிருக்கும் தமிழ் கருத்து அவற்றின் தமிழ் மொழிபெயர்பன்றி அவற்றால் வெளிப்படும் சரியான தமிழ் கருத்தாகும்.


What do you do?
நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

I am doing nothing.
நான் எதுவும் செய்வதில்லை.

I have some works to finish.
எனக்கு நிறைவுசெய்ய சில வேலைகள் உள்ளன.

It’s a nice day, isn’t it?
இன்று ஒரு நல்ல நாள், இல்லையா ?

Yes, it is a nice day.
ஆம், இன்று ஒரு நல்ல நாள்.

Do you mind if I came a bit late?
நான் சற்று தாமதமாக வந்தால் நீங்கள் எதாவது நினைப்பீர்களா?

No, it is not a problem.
இல்லை, அது ஒரு பிரச்சினையல்ல.

Would you like to have something?
எதாவது சாப்பிட விரும்புகிறீர்களா?

No, thanks.
இல்லை, நன்றி.

Sure, let's eat something.
நிச்சயமாக, ஏதாவது சாப்பிடுவோம்.

What do you like to have?
நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள்?

Shall we go there?
நாங்கள் அங்கே போகலாமா?

Okay, let's go there.
சரி, நாங்கள் அங்கே போகலாம்.
Previous Post Next Post