பொதுவாக மரபுத்தொடர்கள் என்பவை ஒரு விடயத்தை மறைமுகமாக குறிப்பவையாகும். இவை கூறும் நேரடி அர்த்தத்தை அன்றி இவற்றினுள் ஒரு பொதுவான அர்த்தம் புதைந்திருக்கும்.
இங்கே இரகசியங்களைப் பற்றி பேசப் பயன்படும் சில ஆங்கில மரபுத்தொடர்களையும் (English Iidoms), அவற்றால் பெறப்படும் உண்மையான அர்த்தத்தினையும் பார்ப்போம்.
Behind your back
ஒருவர் அறியாமல் ஒருவரைப் பற்றிக் கதைத்தல்.
தமிழில் இதனை முதுகுக்குப் பின்னால் இருந்து கதைத்தல் என்பார்கள். இங்கே உண்மையில் கதைப்பவர் முதுகுக்குப் பின்னால் இருப்பதில்லை. ஆனால் அவர் குறித்த நபரைப் பற்றிக் கதைக்கும் விடயத்தை அந்தக் குறித்த நபர் அறிவதில்லை.
Under wraps
ஒரு விடயத்தை மறைத்தல்
ஒரு பொருளை அல்லது விடயத்தை மறைத்து வைப்பதை குறிக்க இந்த ஆங்கில மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.
Keep it under wraps for some time.
சிறிது நேரத்திற்கு அதை மறைத்து வையுங்கள்.
Up someone's sleeve
ஒரு இரகசிய திட்டத்தை பற்றிக் கதைத்தல்.
ஒருவரின் மனதில் உள்ள விடயத்தை வெளியிட விரும்பாத போது இம்மரபுத்தொடரை உபயோகிக்க முடியும்.
There is something up your sleeve.
நீங்கள் ஏதோ ஒன்றை (ஒரு திட்டத்தை) மறைக்கிறீர்கள்.
Dark horse
ரகசியமாக விடயங்களை செய்யும் ஒரு நபரை விவரித்தல்.
ஒருவர் எவ்வளவு தான் உங்களுடன் ஒன்றாக இருந்தாலும் அவரைப் பற்றிய சில குறிப்பிட்ட விடயங்களை உங்களிடமோ அல்லது வேறு யாரிடமோ சொல்வதில்லை. இவ்வாறான ஒருவரை ஆங்கிலத்தில் dark horse என அழைப்பார்கள்.
Behind closed doors
ஒரு மறைவான இடத்தில் நடக்கும் விடயங்களை விவரித்தல்.
ஒரு விடயம் நடப்பதை பற்றி அறிந்திருந்தாலும் அது எப்படி நடந்தது என்ற முழு விபரமும் தெரியாமல் இருக்கும்.
That happened behind closed doors.
அது மறைவாக (யாருக்கும் தெரியாமல்) நடந்தது.
Off the record
பொது மக்களோ ஊடகங்களோ அறியாமல் ஒரு விடயத்தை கூறுதல்.
ஒருவர் கூறும் விடயத்துக்கு சாட்சியோ அல்லது ஆதாரமோ இல்லாமல் செய்தல் அல்லது இல்லாமல் செய்தல்.
Shrouded in mystery
மர்மமான ஒரு விடயத்தை பற்றிக் கதைத்தல்.
சில சந்தர்ப்பங்களில் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியாது. எந்தத் தகவலும் இல்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களை விவரிக்க இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.
இப்பதிவு உங்களளுக்குப் பிடித்திருந்தால், இதனை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.